குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின்
பக்கத்தில் அமைந்துள்ளது அல்லது நமதின் வயிறில் உள்ளது என்றும் கூறலாம்.
குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது அகும்.குடல் இருவகைகள் உண்டு அவை
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் என்று இருவகைப்படும்.
குடல் வகைகள்
சிறுகுடல்
உயிரியலில் சிறுகுடல் (small intestine) என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:- முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.
- நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.
- பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.
No comments:
Post a Comment