Thursday, July 11, 2013

Urenus - யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும்.


யுரேனசு
யுரேனசு
கண்டுபிடிப்பு
கண்டுபிடுத்தவர் William Herschel
கண்டுபிடிகப்பட்ட நாள் மார்ச் 13, 1781
சுற்றுப்பாதை விபரங்கள்
சராசரி ஆரம் 2,870,972,200 km
வட்டவிலகல் 0.04716771
சுற்றுக்காலம் 84y 3d 15.66h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
369.7 days
சராசரிச் சுற்றுவேகம் 6.8352 km/s
சாய்வு 0.76986°
உபகோள்களின் எண்ணிக்கை 27
பௌதிகப் பண்புகள்
மையக்கோட்டு விட்டம் 51,118 km
மேற்பரப்பளவு 8,130,000,000 km2
திணிவு 8.686×1025 kg
சராசரி அடர்த்தி 1.29 g/cm3
மேற்பரப்பு ஈர்ப்பு 8.69 m/s2
சுழற்சிக் காலம் -17h 14m
அச்சுச்சாய்வு 97.86°
வெண் எகிர்சிதறல் 0.51
தப்பும்வேகம் 21.29 km/s
Cloudtop avg. temp. 55 K
Surface temp.
min mean max
59 K 68 K N/A K

யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.
யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

பொருளடக்கம்

வரலாறு

இக்கிரகம் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கிரகம் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் யுரேனசுக்கும் இருந்தது.

தன்மைகள்

இதனுடைய வளி மண்டலம் 83 சதவீதம் ஹைடரசனையும், 15 சதவீதம் ஹீலியமும் மீதி அளவில் மீத்தேனையும் ஹைட்ரோ கார்பன்களையும் கொண்டுள்ளது. அதனால் இது வாயுக்கிரகங்களிலும் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வாயுக்கிரகங்கள் வியாழனும், சனியும் ஆகும்.

உருளும் கிரகம்

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கிரகம் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

வளையங்கள்

இக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன.
இந்த வளையங்கள் யுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை யுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு யுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள் யுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்ட பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.

நிலவுகள்

இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. [1][2] மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன.

யுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறு

நிலவின் பெயர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
(கி. பி. களில்)
கண்டறிந்தவர். குறிப்புகள்
இடைட்டனியா 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார்.
ஒபெரோன் 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார்.
ஏரியல் 1851 லேசல்
அம்ரியல் 1851 லேசல்
மிரண்டா 1948 கியூப்பர்
பக்கு 1985 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
சூலியட்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
போர்ட்டியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
கிரசுடியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
டெசுடமோனா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
ரோசலின்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
பெலிண்டா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
கார்டலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
ஒபலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
பியங்கா 1986 சுமித்து, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
பெர்டிடா 1986 கர்கோசா, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார்.
கலிபான் 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு.
சைக்கோரக்சு 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு.
செடபோசு 1999 கவிலார்சு, கிளாட்மேன், கோல்மன், பெடிட்டு, சுகால்.
சுடவன்னோ 1999 கிளாட்மேன், கோல்மன், கவிலார்சு, பெடிட்டு, சுகால்.
பிராசுபெரோ 1999 கோல்மன், கவிலார்சு, கிளாட்மேன், பெடிட்டு, சுகால்.
இடிரின்குலோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு.
பெர்டினான்டு 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு.
பிரான்சிசுக்கோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு, கிளாடுமேன்.
மேப் 2003 சோவால்டரு, இலிசாவுவரு.
கியூபிட் 2003 சோவால்டரு, இலிசாவுவரு.
மார்கரட்டு 2003 இசெப்பர்டு, ஜெவிட்டு.

வாயேஜர் 2

1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேகங்கள்

யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை. [3] There are also violent storms on the surface with winds that blow at 160 miles per hour. Scientists are studying the clouds to try and understand the storms on the planet.[4]

யுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்

சூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

மேற்கோள்கள்

  1. Faure, Gunter; Mensing, Teresa (2007). "Uranus: What Happened Here?". Introduction to Planetary Science. Ed. Faure, Gunter; Mensing, Teresa M.. Springer Netherlands. DOI:10.1007/978-1-4020-5544-7_18. 
  2. "Uranus". nineplanets.org. பார்த்த நாள் 2007-07-03.
  3. "Uranus Clouds, overview". windows.ucar.edu. பார்த்த நாள் 29 March 2010.
  4. "SPACE.com -- New Images Reveal Clouds on Planet Uranus". space.com. பார்த்த நாள் 29 March 2010.

No comments:

Post a Comment