Tuesday, July 9, 2013

முள்ளங்கி


முள்ளங்கி
முள்ளங்கிகள்
முள்ளங்கிகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): விதைமூடிய தாவரங்கள்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Brassicaceae
பேரினம்: Raphanus
இனம்: R. sativus

முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும். பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.
100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கல்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

No comments:

Post a Comment