Saturday, July 6, 2013

நீரடிக் காளான் அல்லது ரோக் காளான் (ஆங்கிலம்: Rogue mushroom, Underwater Mushroom ; இலத்தின்: Psathyrella aquatica )


நீரடிக் காளான்

உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Fungi
பிரிவு: Basidiomycota
வகுப்பு Agaricomycetes
வரிசை: Agaricales
குடும்பம்: Psathyrellaceae
பேரினம்: Psathyrella
இனம்: P. aquatica

நீரடிக் காளான் அல்லது ரோக் காளான் (ஆங்கிலம்: Rogue mushroom, Underwater Mushroom ; இலத்தின்: Psathyrella aquatica ) ஒரு பூஞ்சைக் காளான் வகையாகும், இதுவரை அறியப்பட்ட காளான் இனங்களில் நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு இனம் இதுவேயாகும். பூஞ்சைகளைப் பற்றிய நூலிதழான மைக்கொலோஜியாவில் 2010இல் இது விபரிக்கப்பட்டது. [1]
இந்தக் காளான் தென் ஒரேகான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ரொபர்ட் கொஃபானால் ஐக்கிய அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் அமைந்துள்ள ரோக் ஆற்றில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. [2] [3] நீரடிக்காளான் ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து நிமிர்ந்து நிற்குமளவுக்கு வலிமை கொண்டதாக உள்ளது. நீருக்குள் வசிக்கும் முதன்முதல் அறியப்பட்ட காளான் எனும் காரணத்தால் 2011 ஆம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment