Friday, July 5, 2013

ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam)


ஊவர் அணை
ஊவர் அணை
ஊவர் அணை, படம்:அன்சல் ஆடம்சு (1942)
அதிகாரபூர்வ பெயர் ஊவர் அணை
உருவாக்கும் ஆறு கொலராடோ ஆறு
உருவாக்குவது மீடு ஏரி
அமைவிடம் நெவாடா-அரிசோனா ஐக்கிய அமெரிக்கா
பராமரிப்பு U.S. Bureau of Reclamation
நீளம் 1244 அடி (379 மீ)
உயரம் 726.4 அடி (221 மீ)
கட்டத் தொடங்கியது 1931
திறப்பு நாள் 1936
கட்டுமானச் செலவு $49 மில்லியன்

ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.
மீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.

பொருளடக்கம்

மின்னுற்பத்தி பகிர்மானம்

அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி 1987ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தின்படி விற்கப்பட்டது. பின்னர் அரசு தன் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.. அரசின் 30 வருட ஒப்பந்தப்படி அணையின் மின்னுற்பத்தியை 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.[1] பின்வரும்படி அணையின் மின் உற்பத்தி பிரித்து பயன்படுத்தப்படுகிறது:[2]
Area Percentage
தெற்கு கலிபோர்னியா மெட்ரோபாலிட்டன் தண்ணீர் மாவட்டம் 28.53%
நெவாடா மாநிலம் 23.37%
அரிசோனா மாநிலம் 18.95%
லாஸ் ஏஞ்சலஸ் தண்ணீர் மற்றும் மின்சார துறை 15.42%
தெற்கு கலிபோர்னியா எடிசன் நிறுவனம் 5.54%
போல்டர் நகரம், நெவாடா 1.77%
கிலன்டேல், கலிபோர்னியா 1.59%
பாசடேனா, கலிபோர்னியா 1.36%
அனகிம், கலிபோர்னியா 1.15%
ரிவர்சைடு, கலிபோர்னியா 0.86%
வெர்னான்,கலிபோர்னியா 0.62%
பர்பேங்,கலிபோர்னியா 0.59%
அசுசா, கலிபோர்னியா 0.11%
கோல்டன், கலிபோர்னியா 0.09%
பேன்னிங், கலிபோர்னியா 0.04%


ஊவர் அணை 2011

No comments:

Post a Comment