Thursday, July 18, 2013

பாக்டீரியா (Bacteria)

பாக்டீரியா (Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள்[2] போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன. மனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்]].[3]. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன.

பொருளடக்கம்

வரலாறு

1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார்[4]. அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[5][6][7]. பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்[8].

உருவவியல்

இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்[9]. பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்[10].

தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா

கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. [11]மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். [12] இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது [13] [14]

No comments:

Post a Comment