Monday, July 8, 2013

அயிரை மீன்

 Steinbeisser 001.jpg

அயிரை மீன் என்பது குளம், வாய்க்கால் மற்றும் சேறுகள் நிறைந்த சிறு ஆறுகள் போன்றவற்றில் வாழும் ஒரு மீன் ஆகும். இம்மீன்கள் உருவத்தில் மிகச்சிறிய அளவில் இருக்கின்றன. இம்மீன்கள் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பயன்படுத்தும் போது பிற மீன்களைப் போல் இம்மீனின் எந்தப் பகுதியும் நீக்கப்படுவதில்லை. இம்மீன்கள் சேற்றுப்பகுதியில் வசிப்பதால் இதன் உடலில் இருக்கும் மேல் தோல் சிறிது நிறமாகும்படி உப்பு கொண்டு ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி இரு சில முறை சுத்தம் செய்யப்படுகிறது. இம்மீன் மருத்துவ குணமுடையதாக இருப்பதால் இதனை வாங்கி உண்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இதன் விலையும் பிற ஆற்று மீன்களை விட அதிகமாக உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள அசைவ உணவகங்களில் இம்மீன் குழம்பு கிடைக்கிறது.

சங்க இலக்கியத்தில் அயிரை மீன்

  • குமரி ஆற்று அயிரை மீனைச் சிறப்பித்துப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (புறம்- 67).
  • தொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ளார் (குறுந்தொகை - 128)

No comments:

Post a Comment