Friday, July 5, 2013

டெஃறி அணை (டெஹ்ரி அணை, Tehri Dam)


டெஃறி அணை
Tehri Dam
Tehri Dam
உருவாக்கும் ஆறு Bhagirathi River
அமைவிடம் உத்தராகண்டம், இந்தியா
பராமரிப்பு Tehri Hydro Development Corporation
உயரம் 260 மீட்டர்கள்s (853 அடி)
கட்டத் தொடங்கியது 1978
கட்டுமானச் செலவு 1 Billion U.S. dollars
புவியியல் தரவு
அமைவிடம் 30°22′40″N 78°28′50″E

டெஃறி அணை (டெஹ்ரி அணை, Tehri Dam) என்பது டெஃறி ஐதரோ டெவலப்மென்ட் கார்பரேசன் லிமிட்டடின் முக்கியமான அணையாகும். இது இந்தியாவில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் டெஃறி நகரத்திற்கு அருகில் மையப்படுத்திய முக்கிய நீர் மின் திட்டபணியாகும். புனித கங்கை நதியை துணை ஆறாகக் கொண்டு பாகிரதி ஆற்றில் அமைந்துள்ள இந்தத் டெஃறி அணை 855 அடி (261 மீ) உயரத்தைக் கொண்டிருப்பதால் உலகின் 5வது உயரமான அணையாகப் பெயர் பெற்றுள்ளது.[சான்று தேவை]

பொருளடக்கம்

மீள்பார்வை

2400 MW அளவு ஆற்றல் உற்பத்தித் திறனையும், 270,000 எக்டர்கள் உள்ள பகுதிக்கு நீர்ப்பாசன வசதியையும், 600,000 எக்டர்கள் பகுதிக்கு நீர்ப்பாசான உறுதிப்படுத்தலையும், டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் போன்ற தொழில்சார்ந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 270 மில்லியன் கேலன்கள் குடிநீரையும் வழங்கும் திறனையும் இந்த அணை கொண்டுள்ளது. கோட்டேழ்சுவரில் நீரோட்ட திசையில் 14 கிலோமீட்டரில் மற்றொரு சிறிய அணை உள்ளது. அங்கு 400 MW மின்சாரம் உருவாக்கப்படுகின்றது. மேலும் அது TDP நீர்மின் திட்டத்தின் பகுதியாகவே கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்புகள் மூலமாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள்

பாகீரதி மற்றும் பிலாங்கான நதிகளின் மீது டெஃறி அணை, 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்
2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெஃறி அணை
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெஃறி அணை
சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் மூலமாக இந்த டெஃறி அணை இயங்குவதற்கு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குக் கூடுதலாக இமயமலை அடிவாரங்களில் அழியத்தக்க சூழ்நிலைத்தொகுப்புடன் மிகப்பெரிய அணையாக இருப்பது சுற்றுச்சூழலுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இத்திட்டப்பணி கருதப்படுகிறது. அணையின் புவிச்சரிதவியலுக்குரிய நிலைப்பாடும் மற்றொரு பிரச்சினையாக உள்ளது. ஒரு முக்கிய நில அமைப்பியன் தவறுடைய பகுதியான மத்திய இமயமலை நிலநடுக்கப் பகுதியில் இந்த டெஃறி அணை அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இப்பிரதேசத்தில் 6.8 பரும அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் நிலநடுக்கமுனையானது அணை அமைந்துள்ள இடத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் ஏற்பட்டது. இந்த அணை 7.2 பரும அளவு நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் கட்டப்பட்டுள்ளது என அணையின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் ரிக்டர் 8.5 பரும அளவில் நிலநடுக்கங்கள் வர வாய்ப்புள்ளதாக சில நிலநடுக்க ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதைப் போன்ற பெருந்தீநேர்வு நிகழ்ந்து அணை உடைந்தால் நீரோட்டப் பாதையில் வசிக்கும் அரை மில்லியனுக்கும் அதிகமான பேர் உள்ள பல கிராமங்கள் அழிய நேரிடும்.
இப்பகுதியில் உள்ள 100,000 க்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்கு குடியேற வேண்டுமென்பதால் மறு குடியேற்ற உரிமைகளின் மேல் நீண்ட சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுத்தது. அதன் விளைவாக இத்திட்டப்பணி முடிவுறாமல் காலத்தாழ்வு அடந்தது.
2005 ஆம் ஆண்டில் இருந்து நீர்த்தேக்கம் நிரப்பப்பட்டதால் பாகிரதி நீரின் போக்கு அளவு வழக்கமான 1000 ft³/s இல் இருந்து 2 ft³/s வரை குறைந்தது. இந்த நீர்குறைபாடு இப்பிரதேசத்தில் அணைக்கு எதிராக கண்டனங்களுக்கு மையமாக அமைந்தன. புனித கங்கையின் பகுதியாக இந்த பாகிரதி கருதப்படுவதில் இருந்து இந்து தொன்மவியலுக்கு நெருக்கடியாக இந்த நீர் நிலைகள் அமைந்தன. ஆண்டில் சிலசமயங்களில் பாகிரதியின் நீர் தடுத்து நிறுத்தப்படுவதால் இதன் துணை ஆறுகளில் நீர் போக்கு நின்று விடுகிறது. அங்கு மின்சாரம் விளைவிப்பதால் கங்கையின் புனிதத்தன்மைக்கு மிகப்பெரிய ஊறு விளைவிக்கிறது என இந்துக்கள் பலருக்கு கோவத்தை உருவாக்கியுள்ளது. பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் இருந்தாலும் டெஃறி அணையின் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்தது. 2006 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் முதல் அலகு உற்பத்தி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment