Thursday, July 11, 2013

காம்பர்ட்சேவ் மலைத்தொடர் (Gamburtsev Mountain Range) அல்லது காம்பர்ட்சேவ் பனியாற்றடி மலைகள் (Gamburtsev Subglacial Mountains)


காம்பர்ட்சேவ் மலைத்தொடர்
மலைத்தொடர்
கண்டம் அன்டார்ட்டிகா
பகுதி கிழக்கு அன்டார்ட்டிகா

மிகவுயர் புள்ளி
 - உயர்வு 3,400 மீ (11,155 அடி)
 - ஆள்கூறுகள் 80°30′00″S 76°00′00″E

நீளம் 1,200 கிமீ (746 மைல்)

காம்பர்ட்சேவ் மலைத்தொடர் (Gamburtsev Mountain Range) அல்லது காம்பர்ட்சேவ் பனியாற்றடி மலைகள் (Gamburtsev Subglacial Mountains) கிழக்கு அன்டார்ட்டிகாவில் டோம் ஏ அருகே அமைந்துள்ள ஓர் பனியாற்றடி மலைத்தொடர் ஆகும். [1] இந்த மலைத்தொடர் 1958ஆம் ஆண்டில் மூன்றாவது சோவியத் தேடுதல் பயணத்தின்போது கண்டறியப்பட்டது; சோவியத் புவியியலாளர் கிரிகொரி ஏ. காம்பர்ட்சேவ் நினைவாக இதற்கு பெயரிடப்பட்டது. [2][3] இந்த மலைத்தொடர் 600 மீட்டர்கள்s (வார்ப்புரு:Convert/மீ) பனி மற்றும் பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்தாலும் ஏறத்தாழ 1,200 kilometres (750 மை) நீளத்திற்கு பரந்துள்ளது எனவும் சுமார் 2,700 மீட்டர்கள்s (வார்ப்புரு:Convert/மீ) உயரமுடையதாகவும் கருதப்படுகிறது.[4] தற்போதைய மதிப்பீடுகளின்படி இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைக்கு இணையாக நம்பப்படுகிறது. [5] இதன் காலம் 34 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையதாக மதிப்பிடப்பட்டாலும் இந்த மலைகள் எவ்வாறு உருவாயின என்பதைக் குறித்து அறிய இயலவில்லை.[6] சில மதிப்பீடுகள் இவை 500 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக கருதுகின்றன.[4] தற்போதைய மாதிரி வடிவமைப்புகள் காம்பர்ட்சேவ் மலைகளிலிருந்து சரிந்து வந்த பனியாறுகளே கிழக்கு அன்டார்ட்டிகாவின் பனித்தட்டு உருவாகக் காரணமாக அமைந்ததாக காட்டுகின்றன. [1]

அன்டார்ட்டிகா காம்பர்ட்சேவ் மாகாண (AGAP) திட்டம்

2007–09 ஆண்டில் பன்னாட்டு துருவ ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக இந்த மலைத்தொடரினைக் குறித்த தகவல்களை அறிவதற்காக பன்னாட்டு முயற்சிகளின் விளைவாக அன்டார்ட்டிகா காம்பர்ட்சேவ் மாகாணம் உருவாக்கப்பட்டது.[7][8]

No comments:

Post a Comment