Thursday, July 11, 2013

மூடுபனி அல்லது பனிப்புகார்



மூடுபனியைக் கொண்ட ஒரு தெரு. 200 மீட்டர் தூரத்தில் துவிச்சக்கர வண்டியில் வருபவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. 400 மீட்டரில் உள்ள தெருமுனைக்கு அப்பால் பார்க்க முடியவில்லை.

மூடுபனி அல்லது பனிப்புகார் என்பது புவியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வளியில் நீர்த்துளிகளோ, அல்லது பனி படிகங்களோ தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்[1]. இது பொதுவாக ஈரலிப்பான நிலத்திற்கு அண்மையாகவோ, அல்லது ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலோ தோன்றும்[2]. இந்த மூடுபனியைப் போலன்றி முகில் புவி மேற்பரப்பை விட்டு விலகி மிகவும் உயரத்தில் தோன்றும் நீர்த் துளிகளின் தொகுப்பாகும். மூடுபனியின் அடர்த்தி, அதனூடாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய தூரம் என்பதைப் பொறுத்து ஆங்கிலத்தில் fog, mist என்று வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது[3]. Mist இனூடாகப் பார்க்கப்படக் கூடிய தூரம் 1 இலிருந்து 2 கி.மீ. வரை வேறுபடும். ஆனால் Fog இனூடாகப் பார்க்கப்படக் கூடிய தூரம் 1 கி.மீ. ஐ விடக் குறைவாக இருக்கும்[4].

படங்கள்

No comments:

Post a Comment