Tuesday, July 9, 2013

சுக்கான் கண்ணிப் பாரை[1][2] (அலெக்டஸ் இன்டிகஸ், Alectis Indicus)


சுக்கான் கண்ணிப் பாரை மீன்
Indian threadfin (Alectis indicus).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
துணைவரிசை: Percoidei
பெருங்குடும்பம்: பேர்சோய்டீ
குடும்பம்: கராங்கைடீ
பேரினம்: Alectis
இனம்: A. indicus
இருசொற்பெயர்
Alectis indicus
(Rüppell, 1830)
பாரை மீன்களின் பரம்பல் (துல்லியமானதல்ல)
வேறு பெயர்கள்
  • Scyris indicus (Rüppell, 1830)
  • Alectis indica (Rüppell, 1830)
  • Seriolichthys indicus (Rüppell, 1830)
  • Hynnis insanus (Valenciennes, 1862)
  • Caranx gallus (Klunzinger, 1879)
  • Hynnis momsa (Herre, 1927)
பாரை மீன்

சுக்கான் கண்ணிப் பாரை[1][2] (அலெக்டஸ் இன்டிகஸ், Alectis Indicus) பரவலாகக் காணப்படும் கடற்கரையோரம் வாழும் மீன் இனமாகும். இவை இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றின் வெம்மையான பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரையிலான கடற்கரைகளோரம் கூடுதலாக வாழுகின்றன.[3] வயது வந்த மீன்கள் 100 மீ ஆழம் வரையிலான கடற் படுகைகளிலும் இளம் குஞ்சுகள் கயவாய்களிலும் (estuary[4]) ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
பெங்களூரில் ஒரு மீன் கடையில்
இவை 165 செ. மீ நீளமும் 25 கிலோ எடை வரையும் வளரும் பெரிய மீன்கள்.[5] இவை பிற மீன்கள், நத்தைகள், கணவாய்கள், மற்றும் கடல்வாழ் விலங்குகளை உண்டு வாழும் கோண்மாக்கள். இவ்வகை மீன்களை சிங்கப்பூரில் வணிக அளவில் உணவிற்காக பண்ணைகளில் வளர்க்கின்றனர்.[6] ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட தொல்பொருளியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களின் அடிப்படையில் இவற்றை மனிதர்கள் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தியுள்ளது அறியப்பட்டுள்ளது.[7]
இவற்றின் குஞ்சுகளை வீட்டு வளர்ப்பு விலங்குகளாக மீன் தொட்டிகளில் வளர்ப்பதுண்டு. ஆனால் அதற்கு பெரிய தொட்டிகளும் உடன்வளர்க்கப்படும் மீன்கள் அமைதியானவைகளாக இருப்பதும் தேவை.[8]

No comments:

Post a Comment