Tuesday, July 9, 2013

டால்பின் - Dolphin fish


ஓங்கில்
(டால்ஃபின்)
புதைப்படிவ காலம்: முந்திய மயோசீன் - அண்மைக்காலம்
சீசா(பாட்டில்) மூக்கு ஓங்கில் (டால்பின்)
சீசா(பாட்டில்) மூக்கு ஓங்கில் (டால்பின்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு பாலூட்டி
வரிசை: திமிங்கிலமனையி(Cetacea, செட்டாசியா)
துணைவரிசை: பற்திமிங்கிலமனையி(Odontoceti, ஓடோன்ட்டொசெட்டி)
குடும்பம்: கடல் ஓங்கில் வகை (டெல்ஃபினிடே) மற்றும் நன்னீர் ஓங்கில் வகை, (பிளாட்டனிஸ்டொய்டா)
கிரே, 1821
அமெரிக்க இராணுவப்பணியாளன்

ஓங்கில் (டால்பின், ஆங்கிலம்:Dolphin) என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலம் மற்றும் கடற்பன்றிக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில், சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள் உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது[1]. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. டால்பின்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன[2]. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.

பொருளடக்கம்

2007, பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டு

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.

துணுக்குகள்

  • ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை.[2]

இந்திய தேசிய நீர் விலங்கு

பெண் கடவுளான கங்கையின் ஊர்தி ஆன மாகாரா எனும் டால்ஃபின்
ஆற்று ஓங்கில் அக்டோபர் 5,2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. [3][4]

காட்சியகம்

No comments:

Post a Comment