Thursday, July 11, 2013

மலம்புழா அணை - Malanpuzha Dam


மலம்புழா அணை
மலம்புழா அணை
மலம்புழா அணையும் நீர்த்தேக்கமும்
அதிகாரபூர்வ பெயர் மலம்புழா அணை
உருவாக்கும் ஆறு மலம்புழா ஆறு
உருவாக்குவது மலம்புழா நீர்த்தேக்கம்
அமைவிடம் பாலக்காடு மாவட்டம், கேரளா
நீளம் 2,069 மீ
உயரம் 115.06 மீ
கட்டத் தொடங்கியது மார்ச் 1949
திறப்பு நாள் 9 அக்டோபர் 1955
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 236.69 கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி 147.63 ச. கிமீ.

மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும். இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. 1849 மீ. நீளம் கொண்ட கட்டப்பட்ட அணைப்பகுதியும் 220 மீ. நீள மண்ணாலான கரைப்பகுதியும் கொண்டது.[1] கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது இரு கால்வாய்கள் அமைப்பையும் 42,090 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது.[2]
1949ஆம் ஆண்டு துவங்கிய கட்டுமானப்பணிகள் 1955ஆம் ஆண்டில் முடிவடைந்தன. இதன் மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பு 145 சதுர கிலோமீட்டர்களாகும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8000 சதுர மீட்டர்களாகும். கால்வாய்கள் மூலம் வேளாண்மை ஆயக்கட்டுகள் பயன்பெறுகின்றன. நீர்த்தேக்கத்திலிருந்து பாலக்காடு நகருக்கான குடிநீர் வழங்கப்படுகிறது. [2]

No comments:

Post a Comment