Thursday, July 11, 2013

வானவில் - Rainbow

வானவில் தோன்றும் விதம்
 
வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகலடைவதையும் இங்கு காணலாம்.
 


வானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுவுட் தெறிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது.
வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். சிவப்பு:      . ஆரஞ்சு:      . மஞ்சள்:      . பச்சை:      . நீலம்:      . கருநீலம்:      . ஊதா:      என்பதே இந்த வண்ணங்கள்.
பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.
பல வானவில்கள் ஒருமித்து திருகோணமலையில் தென்பட்ட விதம்

இவற்றையும் காணவும்

No comments:

Post a Comment