Thursday, July 11, 2013

கடல் ஆமை (Turtle)


Turtles
புதைப்படிவ காலம்: Late Triassic – Recent, 215–0 Ma
O
S
D
C
P
T
J
K
N
Florida box turtle Terrapene carolina
உயிரியல் வகைப்பாடு [ e ]

Unrecognized taxon (fix): Testudines
Suborders
Cryptodira
Pleurodira
Proganochelydia
and see text
Diversity
14 extant families with ca. 300 species
blue: sea turtles, black: land turtles
A sea turtle at Henry Doorly Zoo, Omaha NE

கடல் ஆமை(Turtle):ஊர்ந்து செல்லும் "டெஸ்டுடைன்' எனும் பிரிவைச் சேர்ந்தவை. ஆமைகள் கடலில் வாழ்பவையானாலும், கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரைகூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள். [1] ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது. உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.[2]பேராமை (leatherback) என்ற கடல் ஆமை 540 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டது. கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் (Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.ஆமைகள் பற்றிய சில உண்மைகள்கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும். இவற்றில் சில இனங்கள் அழிவாய்ப்பை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது. பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.[3]

பொருளடக்கம்

உடலமைப்பு

இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது. பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது. பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும்.[4] கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது உயிர்வளியை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. ஆண் ஆமையின் வயிற்றுப்பகுதி குழியாகவும் பெண்ணின் வயிற்றுப்பகுதி பெருத்தும் குவிந்தும் காணப்படும்.[5]

ஓடுகள்

கடல் ஆமைகளின் ஓடுகள், பல அடுக்குகளால் ஆன எலும்புத் தட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசத்தையும் உடையது. ஆதலால் ஓடுகள் எதையும் தாங்கும் வலிமையுடையதாய் உள்ளது. ஆயினும் ஓட்டில் நரம்புகள் இருப்பதால் உணர்திறன் பெற்றுள்ளது. ஆமைகளின் முதுகு மற்றும் விலா எலும்புகள் ஓட்டுடன் இணைந்திருப்பதால் இதனை ஓடுகளில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. மேலும் ஓடுகள் ஆமைகளுக்குப் பாதுகாப்பாகவும் திகழ்கிறது.

வாழ்வியல்

இனப்பெருக்கம்

ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தவை. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள் கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாகப் பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும் இவை மணற்பாங்கான கடற்கரையில்தான் முட்டையிடுகின்றன. கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழி தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகள் வரை இட்டு அக்குழியை மூடி விடுகின்றன. 200 மு‌ட்டைகளை ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌ட்டு‌விடு‌ம். முட்டைகள் குஞ்சுகளாக மாற சூரிய வெப்பம் தேவை என்பதால் முட்டையிட அவை கடற்கரைக்கு வருகின்றன. 60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடையும். பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.

உணவு

சில ஆமைகள் கடற்பாசிகளையும் கடற்பஞ்சுகளையும் உண்கின்றன. பெருந்தலை ஆமைகள் நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும் வேறுசில வகை ஆமைகள் கடலின் ஆழத்தில் சென்று ஜெல்லி மீன்களையும் சாப்பிடுகின்றன. இதன் இறைச்சியும், முட்டைகளும் உணவாகவும் பயன்படுகின்றன.

சில புகழ்பெற்ற வகைகள்

மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளது. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. பேராமை அல்லது ஏழுவரி ஆமை, சிற்றாமை, அழுங்காமை, தோணியாமை, பெருந்தலைக் கடலாமை என்பவை அவற்றின் பெயராகும். பெருந்தலை ஆமையைத் தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும்.

அழிவாய்ப்பு

மீனவர்கள் விசைப்படகுகளின் மூலம் மீன் பிடிக்கும்போது மீன்பிடி வலைகளில் டெட் எனப்படும் ஆமை தவிர்ப்புக் கருவியைப் பொருத்திக் கொண்டால் வலைகளில் ஆமைகள் மாட்டி இறப்பதைத் தவிர்க்க முடியும். இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் அழிந்து கொண்டே வருவதால் இவற்றைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயன்

கடல் ஆமைகளின் முட்டைகளில் இருந்து மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், சோப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் ரத்தம் மூலநோய்க்கு சிறந்த மருந்தாகிறது. ஆமைகளின் ஓடுகளில் இருந்து அலங்காரப் பொருட்களும் காலணிகளும் கூட தயாரிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment