Back pain
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.
இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கரங்களுக்கும் (கைக்கும்), மேல் முதுகு அல்லது கீழ் முதுகு (கால் அல்லது பாதத்திற்கும் செல்லக்கூடும்) பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் உட்படலாம்.
முதுகுவலி மனிதர்களை மிகவும் அடிக்கடி தொந்தரவு செய்யும் பிரச்சனையாகும். அமெரிக்க ஒன்றியத்தில் கீழ்முதுகுவலி (லம்பாகோ என்றும் அழைக்கப்படுவது) மருத்துவரை மிகவும் அதிகமாக சந்திப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாகும். வயது வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறை முதுகுவலி அனுபவிக்கிறார்கள். வேலை செய்யும் பெரியவர்களில் பத்தில் ஐந்து பேர் ஒவ்வொரு வருடமும் முதுகுவலி அனுபவிக்கிறார்கள்.[1]
முதுகுத்தண்டென்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். இவையனைத்தும் வலியை உண்டாக்கக்கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை முனையுறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்.
பொருளடக்கம் |
நோயின் வகைப்பாடு
உடற்கூற்றின்படி முதுகுவலி: கழுத்து வலி, மேல் முதுகுவலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம்.கால அளவுபடி: குறுங்காலம்( நான்கு வாரங்களுக்குக் குறைவாக), தாழ்தீவிரம் (4 - 12 வாரங்கள்). நாட்பட்ட (12 வாரங்களுக்கு மேலாக).
நோய்க்காரணியின்படி : MSK, நோய்த்தொற்றக்கூடியது, புற்றுநோய், போன்றவை.
சம்பந்தப்பட்ட நிலைகள்
முதுகுவலி ஒரு கடுமையான மருத்துவப் பிரச்சனையின் ஒரு அடையாளமாக இருக்கலாம். என்றாலும் இது தான் எப்பொழுதும் அடிப்படை காரணமென்று சொல்லமுடியாது:- குடல் மற்றும்/அல்லது சவ்வுப்பை கட்டுப்பாடிழப்பு அல்லது கால்களில் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் பலவீனம் ஆகிய உயிரை அச்சுறுத்தும் பிரச்சனைகளுக்கு பொதுவான எச்சரிப்பு அடையாளங்களாக இருக்கலாம்.
- கடுமையான உடல்நலக்குறைவுக்கான மற்ற அடையாளங்களுடன் (உ.ம் . ஜுரம், காரணம் தெரியாத எடையிழப்பு) நேரும் கடுமையான முதுகுவலி (தூக்கத்தைக் கெடுக்கும் அளவிற்கான மோசமான வலி) அடிப்படையில் ஒரு கடுமையான மருத்துவ நிலையை சுட்டிக்காட்டலாம்.
- ஒரு கார் விபத்து அல்லது வீழ்ச்சி போன்ற பேரதிர்ச்சிக்குப் பின் நேரும் முதுகுவலி எலும்பு முறிவு அல்லது மற்ற காயத்தைச் சுட்டிக்காட்டலாம்.
- எலும்புப்புரை அல்லது பல்கிய சோற்றுப்புற்று போன்று முதுகெலும்பு முறிவு ஏற்படுவதற்கான அதிக அபாயமுள்ள மருத்துவ நிலையுள்ளவர்கள் முதுகுவலிக்கும் போது தகுந்த மருத்துவ கவனிப்பை ஏற்ற நேரத்தில் கோர வேண்டும்.
- புற்றுநோய் வரலாறுள்ளவர்களுக்கு (அதிலும் முதுகுத்தண்டிற்கு பரவும் மார்பக, நுரையீரல் மற்றும் சுக்கியன் புற்றுநோய்) முதுகுவலி வந்தால், அவர்களுக்கு முதுகுத்தண்டின் மாற்றிடமேறும் நோயில்லையென்பது உறுதிசெய்யப்பட மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
சில கண்டறிதல் ஆய்வுகள், கீழ்முதுகு தட்டு நெகிழ்தல் மற்றும் சிதைகின்ற தட்டு நோய் ஆகிய இரண்டு நிலைகள் முதுகுவலிக்கு பெரும்பாலும் காரணமென்று கூறப்படுகிறது. ஆனால் , இந்த நோய்நிலைகளில் காணப்படும் முதுகுவலியானது, சாதாரண மக்கள் தொகையில் இருப்பதை விட அதிகமாக இருக்கிறதென்றும், இந்த நோய்நிலைகள் எவ்விதமான இயக்கத்தினால் வலியுண்டாக்குகின்றனவென்றும் புலப்படாமலிருக்கிறது என்று காட்டுகின்றன.[2][3][4][5] கிட்டத்தட்ட 85 சதவீத நிகழ்வுகளில், எவ்வித உடலியக்க காரணங்களும் காண்பிக்க முடியவில்லையென்று மற்ற ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.[6][7]
எக்ஸ்-ரே கதிர்கள் மற்றும் மற்ற மருத்துவ நிழற்பட ஸ்கேன்களில் வெளிப்படும் உடற்கூறு இயல்பிற்கு மாறான நிலைகளை அல்லாமல் வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் குடும்ப இயக்கத்தில் கோளாறுகள் போன்ற உடலியக்கவியல் காரணிகள் முதுகுவலியுடன் அதிக சம்பந்தப்பட்டிருப்பதாகச் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.[8][9][10][11]
அடிப்படை மூலங்கள் மற்றும் காரணங்கள்
முதுகுவலி தோன்ற காரணங்களும் மூலங்களும் பல உள்ளன.[12] எனினும், முதுகுத்தண்டிலுள்ள குறிப்பிட்ட திசுக்களை வலிக்காக நோயறுதியிடல் செய்தது சில பிரச்சனைகளை முன்வைக்கிறது. ஏனெனில் வெவ்வேறு முதுகுத்தண்டு திசுக்களிலிருந்து வரும் அறிகுறிகள் ஒரே மாதிரி தோன்றுகின்றன. ஓரிட உணர்வு நீக்கி தடுப்புக்கள் போன்ற தடை மீறிப்பாயும் நோயறுதியிடும் செயல்முறைகளை பயன்படுத்தாமல் அவைகளை வேறுபிரித்து புரிந்துக்கொள்ளுதல் இயலாத காரியமாகும்.முதுகிலுள்ள எலும்புத்தசை முதுகுவலிக்கான ஒரு சாத்தியமான காரணமாகும். தசை இழுப்புகள் (இழுத்துப்பிடிக்கும் தசைகள்), தசைப் பிடிப்பு மற்றும் தசை சமச்சீரின்மைகள் ஆகியவை தசையில் வரும் வலிக்கான சாத்தியமான காரணங்களாகும். எனினும், பல முதுகுவலி நிகழ்வுகளில் தசைத் திசுக் கோளாறின் கருத்தை நிழற்பட ஆய்வுகள் ஆதரிப்பதில்லை. மேலும் தசைப்பிடிப்புகள் மற்றும் தசை சமச்சீரின்மைகளின் நரம்பியல் உடலியக்கங்கள் சரிவர புரிந்துக்கொள்ளப்படவில்லை.
முதுகுத்தண்டின் மூட்டுக்குரிய கணுக்கள் (உ.ம். நுகவென்புமுளை கணுக்கள்) கீழ் முதுகுவலிக்கான மற்றொரு சாத்தியமான மூலமாக இருக்கலாம். நாட்பட்ட கீழ்முதுகுவலியுள்ள சுமார் மூன்றில் ஒரு பகுதியினரிலும் கழுத்துச்சுளுக்கைத் தொடர்ந்து வரும் கழுத்து வலிக்கும் இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.[12] எனினும் நுகவென்புமுளை கணு வலியின் காரணம் முழுமையாக புலப்படவில்லை. கழுத்துச்சுளுக்கைத் தொடர்ந்து வரும் கழுத்துவலியுள்ளவர்களுக்கு மூட்டுறை திசு சேதமிருக்கலாமென்று கணிக்கப்படுகிறது. நுகவென்புமுளை கணுக்களிலிருந்து வலி தோன்றுபவர்களில், மூட்டுக்குரிய சவ்வின் உள்முகமடிப்பு மற்றும் ஃபைப்ரோ-அடிப்போஸ் மெனிஸ்காய்டுகள் (ஒன்றன்மீது ஒன்றாக எலும்புகள் அசைய உதவி பஞ்சுமெத்தைப் போல் செயல்படுபவை) போன்ற கணுக்களுக்குள்ளிருக்கும் திசு மாற்றிடமாவது, அழுத்தத்திற்குள்ளாவது அல்லது சிக்கிவிடுவது மற்றும் இதனால் வலியெழுவது மற்றொரு கோட்பாடாகும்.
முதுகுவலிக்கான மற்ற பல்வேறு பொதுவான மூலங்களும் காரணங்களுமுள்ளன, அவற்றில்: முதுகுத்தண்டு தட்டு நெகிழ்தல் மற்றும் சிதைகின்ற தட்டு நோய் அல்லது முள்ளெலும்பு இடையிணைப்பு நழுவல், கீல்வாதம் (சிதைகின்ற மூட்டு நோய்) மற்றும் முதுகெலும்பு சுருக்கம், பேரதிர்ச்சி, புற்றுநோய், நோய்த்தொற்று, எலும்புமுறிவுகள் மற்றும் அழற்சி நோய்கள்[3] ஆகியவை அடங்கும்.
முளைவேர் வலியான (சியாட்டிகா) என்பது ‘ஓரிடமல்லாத’ முதுகுவலியிலிருந்து வேறுபிரித்து துளையிடாத நோயறிதல் சோதனைகள் மூலமாகவே நோயறியப்படலாம்.
தட்டுகளிலிருந்து-தோன்றாத முதுகுவலியின் மீது புதிய கவனம் திரும்பியிருக்கிறது. இதில் நோயாளிகள் இயல்பான அல்லது ஏறக்குறைய-இயல்பான MRI மற்றும் CT ஸ்கேன்கள் பெற்றிருக்கிறார்கள். கதிர்வரைவுகளில் எவ்விதமான இயல்பு நிலையிலிருந்து மாற்றமில்லாத நோயாளிகளில் முதுகுப்புற ராமசின் (ramus) பங்குப்பற்றி புதிய ஆய்வுகளில் ஒன்று கவனம் செலுத்திவருகிறது. உடலின் பிற்பக்க ராமி நோய் அறிகுறியை பார்க்கவும்.
மேலாண்மை
வலியின் தீவிரத்தை எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாகவும் அதிகமாகவும் குறைப்பது; தினசரி செயல்பாடுகள் செய்வதில் வலியுற்றவரின் ஆற்றலை திரும்பக் கொண்டுவருவது; எஞ்சியுள்ள வலியை அனுசரிக்க நோயாளிக்கு உதவுவது; சிகிச்சைமுறையின் பக்கவிளைவுகளை மதிப்பிடுவது; மற்றும் நோய்மீளலில் தடையாயிருக்கும் சட்ட மற்றும் சமூக பொருளாதார தடைகளை நோயாளி சுமூகமாக சமாளிப்பது ஆகியவை முதுகுவலிக்கு சிகிச்சையளிக்கும்போது, மேலாண்மை, தனது இலக்குகளாகக் கொள்கிறது. பலருக்கு, மறுசீரமைப்புடன் வலியை தாங்கக்கூடிய அளவில் வைப்பதே இலக்காக இருக்கிறது. இது பிற்பாடு நெடுங்கால வலி நிவாரணத்திற்குக் கொண்டு செல்லும். மேலும், சிலருக்கு பெரிய அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்த்து அறுவை-சிகிச்சையல்லாத சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வலியை மேலாண்மை செய்வதே இலக்காகும். மற்றவர்களுக்கு அறுவைசிகிச்சையைப் பயன்படுத்தி மிக விரைவாக வலியிலிருந்து விடுபடுவதே இலக்காகும்.அனைத்து சிகிச்சைகளும் அனைத்து நிலைகளுக்கும் வேலை செய்வதில்லை அல்லது அதே நோய் நிலையுள்ள அனைவருக்கும் வேலை செய்வதில்லை. பலர் தங்களுக்கு சிறப்பாக எது வேலை செய்கிறதென்பதை நிர்ணயிக்க பல்வேறு சிகிச்சைத் தேர்வுகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. தற்போதிருக்கும் நோய்நிலை (குறுங்கால அல்லது நாட்பட்ட) கூட சிகிச்சைத் தேர்வை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். முதுகுவலியுள்ள சிறுபான்மை நோயாளிகளுக்கு (1% முதல் 10% வரை என்று பலர் அனுமானிக்கின்றனர்) மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
குறுகிய கால நிவாரணம்
- முதுகு வலிப்பு நோய்கள் அல்லது மற்ற நோய்நிலைகளுக்கு அனல் சிகிச்சைமுறை பயனுள்ளதாக இருக்கிறது. காக்ரேன் கொலாபுரேஷன் நடத்திய ஆய்வுகளை உயர் நிலை பகுப்பாய்வு செய்த போது அனல் சிகிச்சை குறுங்கால மற்றும் தாழ்தீவிர கீழ்முதுகு வலியின் அறிகுறிகளைக் குறைக்கக்கூடுமென்ற முடிவு பெறப்பட்டது.[13] சில சிகிச்சைப் பெறுபவர்கள் ஈரமான அனல் (உ.ம். சூடான குளியல் அல்லது நீர்ச்சுழி) அல்லது குறைந்த அளவு சூடு (4 முதல் 6 மணி நேரம் வரை சூடாக இருக்கும் ஒரு அனல் உரை) மிகவும் நன்றாக வேலை செய்வதாகக் கூறியுள்ளனர். சில சிகிச்சைகளில் குளிர் அழுத்த சிகிச்சைமுறை (உ.ம். பனிக்கட்டி அல்லது குளிர் பை (Pack) வைத்தல்) முதுகுவலி நிவாரணத்தில் திறனுள்ளதாக இருக்கலாம்.
- தசை தளர்த்திகள், அபின்கள்,[14] ஸ்டீராய்டல்லாத அழற்சியெதிர்ப்பு மருந்துகள்(NSAIDகள்/NSAIAகள்)[15] அல்லது பாரசிடமால் (அசிடமினோஃபென்) ஆகிய மருந்துகளைப் பயன்படுத்துதல். காக்ரேன் கொலாபுரேஷன் நடத்திய சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளின் தொகுப்பாய்வின் முடிவில் கார்டிகோஸ்டீராய்டுகளுடனான மருந்தூசி சிகிச்சைமுறை கீழ்முதுகு வலியில் உதவுகிறதென்பதை நிர்ணயிக்க போதுமான மருத்துவ சோதனைகளில்லையென்பது கண்டுபிடிக்கப்பட்டது.[16] தசையூடான கார்டிகோஸ்டீராய்டுகளின் மீதான ஆய்வு அவைகளின் எந்தப் பலனையும் காணவில்லை.[17]
- உடற்பிடிப்பு சிகிச்சைமுறை, அதுவும் ஒரு அனுபவமிக்க சிகிச்சையளிப்பவர் அளிப்பது குறுகிய கால நிவாரணத்தை அளிக்க முடியும்[18]. ஊசிவழி அழுத்தல் (அக்யுபிரஷர்) அல்லது அழுத்தப்புள்ளி உடற்பிடிப்பு, பாரம்பரிய (ஸ்வீடிஷ்) உடற்பிடிப்பை விட அதிக பலனளிக்கலாம்.[19]
பாரம்பரிய சிகிச்சைகள்
- வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் ஒரு திறமிக்க அணுகுமுறையாக இருக்கலாம், ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட உடல்நல நிபுணரின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும். பொதுவாகவே, முதுகு சிகிச்சை திட்டங்களில் ஏதோ ஒரு உருவில் தொடர்ச்சியான உடல் நீட்சிப் பயிற்சியும், உடற்பயிற்சியும் ஒரு முக்கிய அங்கமாக நம்பப்படுகிறது. எனினும், உடற்பயிற்சியானது தீவிரமான வலிக்கு பயனளிக்காமல் நாட்பட்ட முதுகுவலிக்கு திறமுள்ளதாகக் காணப்பட்டுள்ளது.[20] சாதாரண செயல்களின் தொடர்தலை விட தீவிரமான வலி நிகழ்வுகளில் செய்யப்படும் முதுகை-செயல்படுத்தும் உடற்பயிற்சிகள் வலி பொறுப்பதில் திறன் குறைந்ததாக உள்ளது என்று மற்றொரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.[21]
- உடல் நீட்சிப் பயிற்சியும் மற்றும் வலுவூட்டல் (முதுகுத்தண்டிற்கு ஆதரவளிக்கும் தசைகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி) உட்படும் இழுத்துப்பிடித்தல் மற்றும் உடற்பயிற்சிக் கொண்ட உடற்பயிற்சி சிகிச்சைமுறை தொழில்முறை சிகிச்சைகளில் பலனுள்ளதாக ‘முதுகு வலி நீக்கு பயிற்சிப் பள்ளிகள்’[22] காண்பித்துள்ளன. ஸ்கொலியோசிஸ், பின் கூனல், முள்ளெலும்பு நழுவல் மற்றும் இவைகளுடன் சம்பந்தபட்ட முதுகெலும்பு கோளாறுகளுக்கான சிறப்பு உடற்பயிற்சி சிகிச்சைமுறையான ஷ்ராத் முறை ஸ்கொலியோசிஸ் உள்ள பெரியவர்களில் முதுகுவலியின் தீவிரத்தையும் நிகழ்வெண்களையும் குறைப்பதில் திறமுள்ளதாகக் காணப்பட்டுள்ளது.[23]
- பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு சமவாய்ப்புடன் கட்டுபடுத்தப்பட்ட சோதனை, த அலெக்சாண்டர் டெக்னிக் நாட்பட்ட முதுகுவலியுள்ள சிகிச்சைப்பெறுபவர்களுக்கு நீண்டகால பலனளித்ததாக கண்டுபிடித்தது.[24]. இதையடுத்த ஒரு மறு ஆய்வு ‘அலெக்சாண்டர் டெக்னிக்கில் ஆறு பாடங்களுள்ள தொடருடன் ஒரு உடற்பயிற்சி திட்டத்தைப் பின்பற்றுவது ஆரம்ப சுகாதாரத்தில் முதுகுவலிக்கு அளிக்கக்கூடிய மிகவும் திறமிக்கதும் மலிவானதுமான சிகிச்சைத் தேர்வாகும்’ என்று முடிவு செய்தது[18].
- தகுந்த முறையில் பயிற்சிப்பெற்று தகுதியுள்ள கைரொப்ராக்டர், எலும்புநோயியலர், உடற்பயிற்சி நிபுணர் அல்லது ஒரு ஃபிசியாட்ரிஸ்ட் அளிக்கும் தசை இழுத்துப்பிடித்தல். மானிப்யுலேஷனின் திறனை ஆய்வு செய்த ஆய்வுகள், இந்த அணுகுமுறை மற்ற சிகிச்சைமுறைகளுக்கு ஒத்ததாகவும் பிளசீபோவை விட சிறந்ததாகவும் தெரிய வந்துள்ளது.[25][26]
- குத்தூசி மருத்துவம் (அக்யுபங்க்சர்) முதுகுவலிக்கு நிரூபிக்கப்பட்ட பலனையளித்துள்ளது[27]; எனினும் ஒரு சமீபத்திய சமவாய்ப்பிட்ட கட்டுபடுத்தப்பட்ட சோதனை உண்மையான மற்றும் போலியான அக்யுபங்க்சருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசத்தைக் காண்பிக்கவில்லை [28].
- மனோதத்துவ அல்லது உணர்ச்சிப்பூர்வ காரணங்களில் கவனம் செலுத்தும் கல்வி மற்றும் மனநிலை மாற்றியமைப்புகள்[29] - பதிலளிப்பாளர்-புலன்வழி சிகிச்சைமுறை மற்றும் வளர்வீத தளர்ச்சி சிகிச்சைமுறை நாட்பட்ட வலியைக் குறைக்கலாம்.[30]
அறுவை சிகிச்சை
பின்வரும் நிலைகளலுள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை தகுந்ததாக இருக்கலாம்:- கீழ்முதுகு தட்டு நெகிழ்தல் மற்றும் சிதைகின்ற தட்டு நோய்
- கீழ்முதுகு தட்டு நெகிழ்தல், சிதைகின்ற தட்டு நோய் அல்லது முள்ளெலும்பு நழுவல் மூலமாக வரும் முதுகுத்தண்டு சுருங்கல்
- ஸ்கொலியோசிஸ்
- அழுத்த எலும்புமுறிவு
சந்தேகத்திற்குரிய பலனளிப்பவை
- குளிர் அழுத்த சிகிச்சைமுறை இழுத்துப்பிடித்துள்ள முதுகு அல்லது நாட்பட்ட முதுகுவலிக்கு சிகிச்சையாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக கோல்ஃப், தோட்ட வேலை அல்லது பளுதூக்கல் போன்ற கடினமுள்ள உடற்பயிற்சிக்குப்பின் வரும் வலியையும் அழற்சியையும் குறைக்க வல்லதென்றும் கூறப்படுகிறது. எனினும் சமவாய்ப்பிட்டு கட்டுபடுத்தப்பட்ட சோதனைகளை தொகுப்பாய்வு செய்த காக்ரேன் கொலாபுரேஷன், “கீழ் முதுகுவலிக்கு குளிர் சிகிச்சை அளிப்பதன் ஆதாரம் இன்னும் குறைவாகவே காணப்படுகிறது. கிடைக்கப்பெறுவதும் மூன்று மோசமான தரத்திலுள்ள ஆய்வுகள் மட்டுமே. இவற்றிலிருந்து கீழ்முதுகுவலிக்கு குளிர் சிகிச்சையை பயன்படுத்துவதற்கான முடிவையும் எடுக்கமுடியாது என்று குறிப்பிட்டது.[13]
- நோய்ப்பண்புகளை அதிகரிக்கக்கூடிய படுக்கை ஓய்வு அவ்வளவாக பரிந்துரைக்கப்படுவதில்லை.[31] அப்படித் தேவைப்பட்டால் இரண்டொரு நாட்களுக்கு மட்டுமே கூறப்படுகிறது. நீட்டிக்கப்பட்ட படுக்கை ஓய்வு அல்லது செயலின்மை உண்மையில் எதிர்விளைவுண்டாக்குகிறது. ஏனென்றால் இதனால் உண்டாகும் இறுக்கம் அதிக வலியுண்டாக்குகிறது.
- தசையினூடான மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) போன்ற மின்சிகிச்சை முறைகளும் முன்மொழியப்படுகின்றன. இரண்டு சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் இருவேறு முடிவுகளை அளித்தன.[32][33] இதனால் கொக்ரேன் கொலாபுரேஷன் TENSன் பயன்பாட்டிற்கு ஆதரவளிக்க போதுமான ஆதாரமில்லையென்ற முடிவுக்கு வந்தது.[34] இதனுடன் தண்டுவட தூண்டுதலும் முதுகுவலியின் பல்வேறு அடிப்படை காரணங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில் மூளைக்கு அனுப்பப்படும் வலி சமிக்ஞைகளை இடைநிறுத்தம் செய்ய ஒரு மின் உபகரணம் பயன்படுத்தப்படுகிறது.
- இழுக்கை முறை அல்லது முதுகெலும்புகள் புவி ஈர்ப்பு விசையால் (இந்த முறையில்) பரவுவதால் கவிழ்த்தல் சிகிச்சைமுறை தற்காலிகமாக முதுகுவலி நிவாரணமளிக்க பயன்படும். இந்தப் பிரிவு நடைபெறும் வரை சிகிச்சைப் பெறுபவர் கணுக்கால் அல்லது முட்டிகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தலைகீழாகத் தொங்குவார். இதன் பலன் முழுவதுமாக தலைகீழாகத் தொங்காமல் (90 டிகிரி) 10 முதல் 45 டிகிரிகளுக்குள்ளேயே குறிப்பிடத்தக்க பலன்களை காண இயலும்.[சான்று தேவை]
- அல்ட்ராசௌண்ட் (கேளாஒலி) பலனளிக்கவில்லை என்று காண்பிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.[35]
பேறுகாலம்
பேறுகாலத்தின் போது சுமார் 50 சதவீதம் பெண்கள் கீழ்முதுகுவலியை அனுபவிக்கிறார்கள்.[36] பேறுகாலத்தின் போதான முதுகுவலி, குறிப்பிடும் அளவுக்கு வலியையும் செயலிழப்பையும் கொண்டுவரலாம். மேலும் அடுத்த மகப்பேற்றில் முதுகுவலி வரவும் காரணமாக இருக்கலாம். தாயின் எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி, வேலை திருப்தி ஆகியவற்றைப் பொறுத்து பேறுகாலத்தின் போதான முதுகுவலியின் அபாயம் குறிப்பிடும் அளவுக்கு அதிகரிப்பதாக தெரியவில்லை. மேலும் பிறப்பு எடை, நீடித்த பிறப்புக் கால அளவு மற்றும் அப்கார் மதிப்பெண்கள் ஆகிய பேறுகால விளைவு காரணிகளுடனும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை.வயிற்று வகிட்டு, குறுக்கு விட்டம் மற்றும் கீழ்முதுகு முன்கூனல் ஆகியவை பேறுகாலத்தின் போது ஏற்படும் கீழ் முதுகுவலியோடு சம்பந்தப்பட்டவைகளாகக் காணப்படும் உயிர் இயந்திரவியல் காரணிகளாகும். நிற்றல், உட்காருதல், முன்னே குனிதல், பளுதூக்குதல் மற்றும் நடத்தல் ஆகியவை பேறுகாலத்தின் போது முதுகுவலியை அதிகரிக்கக் கூடியவைகளாகும். பேறுகாலத்தின்போதான முதுகுவலி, பின்வரும் குணாதிசயங்களுடையது: தொடை மற்றும் புட்டங்களுக்குச் செல்லும் வலி, நோயாளியை எழுந்திருக்கப் பண்ணுமளவுக்கான இரவு-நேர வலி, இரவு-நேரத்தில் அதிகரிக்கும் வலி, அல்லது பகல்-நேரத்தில் அதிகரிக்கும் வலி. மிகுந்த தாகம், எடை-தாங்கும் செயல்பாடுகள் அதிலும் உடலின் பாகங்களை சமமில்லாமல் ஈடுபடுத்தும் பின்வரும் செயல்களை தவிர்த்தல்: பளு தூக்குவதில் மிகுந்த திருகல், ஒற்றைக் காலில் நிற்கும் நிலுவைகள், மாடிப்படி ஏறுதல் மற்றும் முதுகு அல்லது இடுப்பைச் சுற்றியுள்ள முனைப்புள்ளிகளில் திரும்பத் திரும்ப தோன்றும் அசைவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தால் வலி குறையும். முட்டியை மடக்காமல் நேரடியாகக் குனிவது பேறுகாலத்தின் போதும் இயல்பான மக்களிலும் கீழ்முதுகை மிகுந்த அழுத்தத்திற்குள்ளாக்குகிறது. இதனால் மிகை இறுக்கம் ஏற்படுகிறது, அதிலும் இடைத்திருக பகுதியில், இது மேலும் சென்று இடுப்பெலும்பு சுழட்டுத்தசையில் மிகை இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.
பொருளாதாரம்
முதுகுவலி முறையே பல தேசிய அரசாங்கங்களால், உற்பத்தியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிவிக்கப்படுகிறது. இது நோய்விடுப்பு மூலமாக தொழிலாளர்களை இழப்பதினால் உண்டாகிறது. சில தேசிய அரசாங்கங்கள், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ஒன்றியம், இந்த பிரச்சனையை எதிர்க்க பொது சுகாதார விழிப்புணர்ச்சி பிரச்சாரங்களை துவக்கியுள்ளன, உதாரணத்திற்கு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எக்ஸிக்யூட்டிவின் பெட்டர் பேக்ஸ் பிரச்சாரம் (சிறந்த முதுகு பிரச்சாரம்). அமெரிக்க ஒன்றியத்தில் கீழ்முதுகு வலியின் பொருளாதார தாக்கம் பின்வரும் செய்திகளை வெளியாக்குகிறது. 45 வயதுக்குக் குறைந்தவர்கள் தங்கள் செயல்பாடு குறைவதற்கான முதல் காரணமாக இருக்கிறது, மருத்துவர் அலுவலகங்களில் காணப்படும் இரண்டாவது அதிகமான புகாராகும், மருத்துவமனையில் மக்கள் சேர்க்கப்படுவதற்கான ஐந்தாவது மிகவும் பொதுவான தேவையாகியிருக்கிறது மற்றும் அறுவை சிகிச்சைக்கான மூன்றாவது பெரிய காரணமாகும்.ஆராய்ச்சி
தோன்றி வரும் சிகிச்சைகள்
- வர்டிபொபிளாஸ்டி என்பது அமுக்க எலும்புமுறிவுகளால் நொறுங்கியிருக்கும் முதுகெலும்பு பகுதிகளில் அறுவை சிமெண்டை சருமத்தடி வாயிலாக ஊசியளிப்பதாகும். இது முதுகெலும்பின் அழுத்த எலும்புமுறிவுகளுக்கு சிகிச்சையளிப்பதில் திறனற்றதாக காணப்பட்டது.
- அழற்சிக்குரிய சைட்டோகின் புற்றுக்கட்டி அழிக்கும் காரணி-ஆல்ஃபாவுக்கான குறிப்பிட்ட உயிரியல் தணிப்பிகளை பயன்படுத்துவது தட்டு-சம்பந்தமான முதுகுவலிக்கு துரித நிவாரணம் அளிக்கக்கூடும்.[37][37]
மருத்துவ சோதனைகள்
தொழில் நிறுவனங்கள் மூலமாகவும் தேசிய ஆரோக்கிய நிறுவனங்கள் மூலமாகவும் பல மருத்துவ சோதனைகள் நிதியளிக்கப்படுகின்றன. முதுகுவலி சம்பந்தமாக தேசிய ஆரோக்கிய நிறுவனங்கள் நிதியளிக்கும் மருத்துவ சோதனைகளைக் குறித்து இங்கு பார்க்கலாம் NIH மருத்துவ முதுகுவலி சோதனைகள்.வலி என்பது தற்சார்புள்ளதாகும், அதை பாரபட்சமற்று சோதித்தல் இயலாத ஒன்றாகும். பாரபட்சமற்று சோதித்தறியக்கூடிய மருத்துவ சோதனைகள் எதுவுமில்லை. மருத்துவ சோதனைகள் வலி தீவிரத்தை 1 முதல் 10 என்ற அளவுகோலில் நோயாளிகள் அறிவிப்பதை பயன்படுத்துகின்றன. சில நேரங்களில் குறிப்பாக குழந்தைகளிடம் ஒரு தொடர்ச்சியான உணர்ச்சி சமிக்ஞைகள் (எமோடிகான்ஸ்) நோயாளிக்கு முன்பாக வைக்கப்படுகின்றன. சிகிச்சைக்குட்படுபவர் ஒரு உணர்ச்சி சமிக்ஞையை சுட்டிக்காட்ட கேட்டுக்கொள்ளப்படுகிறார். சில மருத்துவ சோதனைகள் உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு அங்கீகாரம் பெறுவதில் வெற்றிப்பெற்றாலும் இந்த சிகிச்சைமுறை அதிக திறமுள்ளதென்றோ அல்லது பலனளிக்குமென்றோ ஆதாரமில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் நோயாளியின் மனத்தாலான உணர்வுகளைப் பொறுத்துள்ளன. மருத்துவர் 5 என்ற மதிப்பெண்ணானது 1 அல்லது 10ஐ விட சிறந்ததாவென்று சோதித்தறிய முடியாது. மேலும் ஒரு நோயாளியின் 5 இன்னொரு நோயாளியின் 5டன் ஒப்பிடக்கூடியதா என்றும் நிர்ணயிக்க முடியாது.
2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனையானது முதுகுவலியை சமாளிப்பதில் த அலெக்சாண்டர் டெக்னிக் குறிப்பிடும் அளவுக்கான முன்னேற்றத்தை அளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. உடற்பயிற்சியுடன் கூடிய 6 AT பாடங்கள் 72 சதவிகிதம் முதுகுவலியை குறைத்தது. இது 24 AT பாடங்களில் பெறக்கூடியதாகும். 24 பாடங்கள் பெற்றவர்கள் கட்டுப்பாட்டு இடைநிலையாகிய 21 நாட்களை விட 18 நாட்கள் குறைவான முதுகுவலியைப் பெற்றிருந்தார்கள்.[24]
No comments:
Post a Comment