எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் குறைப்பு மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில காலாச்சரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.
No comments:
Post a Comment