இடியப்பம் அல்லது இடியாப்பம் என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும்.
சம்பல், சொதி
இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது.- இடியப்பம் பிழிதல் (கோப்பு விவரம்)
- அரிசி மாவை பிசைந்து இடியப்ப உரலில் நிறைத்து பிழியும் காட்சி
- ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.
No comments:
Post a Comment