குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்
குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்
************************************************

குழந்தைகள் அனைவருக்கும் மிகப்பிடித்த விளையாட்டுப் பொருள் பிளாஸ்டிக்
பொம்மைகள். அந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் உயிருக்கு எமனாக
கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் பிளாஸ்டிக்
பொருட்களை விளையாடும் போது நாள் தோறும் மூன்று மணி நேரத்துக்கு குறையாமல்
வாயில் வைத்து சுவைப்பதால் புற்று நோய் ஏற்படக்கூடும் என்று கனடா அரசு
நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எங்கு திரும்பினாலும் அங்காடிகளில்
பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட விதவிதமான விளையாட்டு பொருட்களே இருக்கின்றன.
பிளாஸ்டிக் பொம்மைகள் நெகிழும் தன்மை கொண்டதற்கு காரணம் தாலேட்டு என்னும்
இரசாயனப் பொருள் தான்.
குழந்தைகள் விளையாடும் போது மெதுவாய்
வாயில் வைத்து சுவைக்கின்றன. இவையே குழந்தைகளுக்கு நோயை உண்டு பண்ண
செய்கிறது. இது விஷத்தன்மை கொண்டதாகும்.
பொம்மை தயாரிக்கும் போது
சிலர் காரீயம், காட்மீயம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர். இதில்
கலக்கப்படும் காரீயம் நரம்பு மண்டலத்தை பாதிக்ககூடியது.
இதன்
விளைவாக குழந்தைகள் மனவளர்ச்சி குன்ற நேரிடும். இவை குழந்தைகளின் உடம்பில்
தங்கி பல்வேறு நோய்களை உண்டு பண்ணுகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment