மிளகாய்
பொருளடக்கம்
|
கார அளவுகள்
உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த சுகோவில் அளவு (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.இனிப்பு மிளகாய்
இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.மிதமான கார மிளகாய்
மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.இடைப்பட்ட கார மிளகாய்
இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையை சார்ந்தவை.கார மிளகாய்
கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையை சார்ந்தவை.அதீத கார மிளகாய்
அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வ்ரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.படத்தொகுப்பு
பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் தாவரத்தின் காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.-
காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
-
காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
-
காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
-
செடியிலேயே இருக்கும் பழுத்த மிளகாய்
-
பெரிய மிளகாய்கள்
-
வட்ட வடிவமான சிவப்பு மிளகாய்கள்
-
காய்ந்த மிளகாய் (செத்தல் மிளகாய்)
-
பறித்து வைக்கப்பட்டிருக்கும் பழுக்காத (பச்சை), பழுத்த (சிவப்பு) மிளகாய்கள்
-
அலங்காரமாக வளர்க்கப்படும் மிளகாய்ச்செடி
-
மிளகாய்ச்செடி
-
மிளகாயில் செய்யப்பட்ட பஜ்ஜி எனப்படும் உணவு
-
மிளகாய்ப்பொடி இட்டு செய்யப்படும் காரம் கூடிய நண்டு உணவு
-
மிளகாய் வற்றல்
No comments:
Post a Comment