இந்தியாவின் பழங்கால மனிதர்கள் காட்டு வகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து, பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, ராகி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ராகி முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், ராகி ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.
ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
பொருளடக்கம்
|
மருத்துவ பயன்கள்
- சர்க்கரை நோய் மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்துகிறது.
- உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
- குடலுக்கு வலிமை அளிக்கும்.
சாகுபடி முறை
கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். ராகி பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், ராகி சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் ராகி சாகுபடி செய்யலாம்.சமையல் குறிப்பு
- கேழ்வரகு அடை
- கேழ்வரகு கூழு
- கேழ்வரகு களி
- குரக்கன் பிட்டு
No comments:
Post a Comment