பூசணி,
சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும்
தாவரமாகும். பூசணிக்காய்
தாவரவியலின்படி,
பழம் என்றாலும், பொதுவாக
காய்கறியாகக்
கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை;
கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
- சொற்பொருள்
- பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
பயன்கள்
- பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
- தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
- தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
- அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணிக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
(எ.கா)
ஆலோவின்
பூசனிக்காய் படங்கள்
-
பறங்கிக்காயும், பூசணிக்காயும்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பறங்கிக் கீற்றும் விதையும்
-
பூசணிக் கீற்றும் விதையும்
No comments:
Post a Comment