Saturday, June 29, 2013

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

காணப்படும் நாடுகள்

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85% மாவுப்பொருள்=9.2% புரதம்=4.4% கொழுப்பு=0.8% கால்சியம்=62 யூனிட் இரும்புத் தாது=8.9 யூனிட் பாஸ்பரஸ்=4.62% இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.

மருத்துவ குணங்கள்

செடி முழுவதும் மருத்துவக் குணமுடையதாகும்.
  • மஞ்சள் காமாலை
  • மகோதர வியாதி
  • சிறுநீர் எரிச்சல்
  • பெண்களின் பெரும்பாடு
  • குழந்தைகளின் சளி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
False Daisy
Starr 030807-0168 Eclipta prostrata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
பிரிவு: Magnoliophyta
வகுப்பு Magnoliopsida
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
பேரினம்: Eclipta
இனம்: E. alba

No comments:

Post a Comment