Saturday, June 29, 2013

ஆரஞ்சுப்பழம் - Orange

 தோடம்பழம்
ஆரஞ்சுப்பழம் என்பது ஆரஞ்சு சிடரஸ் [2] பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் தரும் தாவரம் ஆகும். இதனை இலங்கையில் தோடை (Orange) என வழங்குவர். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 மீ உயரம் வரை வளரக்கூடியன.

பொருளடக்கம்

வகைகள்

ஆரஞ்சில் பல வகைகள் உண்டு.
புளிக்கும் ஆரஞ்சு
இனிப்பு கலந்த ஆரஞ்சு

பெயர் வந்த முறை

இந்தப் பழத்தின் நிறத்தை ஒத்துள்ள நிறத்தை ஆரஞ்சு நிறம் என்று ஒரு வண்ணத்தைக் குறிப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலும் எல்லாப் பழங்களிலும் பதினொரு சுளைகள் இருக்கின்றன. ஆறும் அஞ்சும் பதினொன்று; இதனால் ஆறஞ்சு என்னும் சொல் மருவி ஆரஞ்சு என வழங்கப்படுவதை உணரமுடிகிறது. இனிப்பு கலந்த ஆரஞ்சுக்கு இந்தச் சுளை எண்ணிக்கை பொருந்துவதில்லை.

பயன்கள்

இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்கள் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளைக் கொடுண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறது.

No comments:

Post a Comment