அப்பம், இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.
அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.
அப்ப வகைகள்
- முட்டை அப்பம்
- வெள்ளை அப்பம்
அப்பமும் கதைகளும்
- குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
- இயேசு அப்பம் பகிர்ந்த கதை
No comments:
Post a Comment