நஞ்சாகும் காளான் வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
அமனிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides) என்னும் காளானே உலகில் காளான் நச்சுத்தன்மையால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம் | |
ICD-10 | T62.0 |
ICD-9 | 988.1 |
நச்சாகும் காளான் (இது மைசெட்டிசம் (mycetism) என்றும் அழைக்கப்படும்) என்பது சிலவகைக் காளான்களில் இருக்கும் நச்சுப்பொருள்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும். இதன் அறிகுறிகளும் விளைவுகளும் உணவுச்செரிமான (சமிப்பாடு) இடையூறுகள் ஏற்படுவதில் இருந்து இறந்து போவது வரை கடுமை நிறைந்ததாக இருக்கும். காளானில் இருக்கும் நச்சுப்பொருள்கள் காளானின் உயிரணுக்களின் வழி நடைபெறும் இரண்டாம்நிலை வளர்சிதைமாற்றங்களின் விளைவால் உருவாவன. மிகப்பெரும்பாலான காளான்கள் நஞ்சாகும் சூழல்கள், மக்கள் சரிவர அடையாளப்படுத்தி எடுத்துப் பயன்படுத்தாமையாலேயே நிகழ்வன. உண்ணக்கூடிய காளான் வகை போலவே சில உண்ணக்கூடாத நச்சுத்தன்மை கொண்ட காளான்கள் உள்ளன. உணவுக்காகக் காளான் பறிப்பவர்கள், அல்லது எடுப்பவர்கள்கூட பிழை செய்ய நேரிடும்.
நச்சுத்தன்மையான காளான்களால் துன்பப்படாமல் இருக்க, உண்ணக்கூடிய நல்ல காளான்களைப் பறிப்பாளர்கள், அதேபோல் தோற்றம் அளிக்கும் நச்சுக் காளான்களையும் நன்கு அடையாளம் காணப் பழகவேண்டும். மேலும் உண்ணக்கூடிய காளான்களுக்கும் அவற்றை உணவாகச் சமைக்கும் முறையைப் பொறுத்தும் நஞ்சாகும் தன்மை இருக்கும். மேலும் இந்த நஞ்சாகும் தன்மை, உண்ணக்கூடிய தன்மை, புவியிட அமைப்பைப் பொறுத்தும் அமையும்[1]
பொருளடக்கம் |
மக்கள் மரபு அறிவு
நஞ்சாகும் காளான் பற்றி நிறைய அவ்வவ் நாட்டார்கள் பல கருத்துகளை மரபாகக் கொண்டு இருக்கின்றனர்[2][3] பெரும்பாலும் நஞ்சாகும் காளான்களை அடையாளப்படுத்த பொதுவான சிறப்புக் குறிப்புகள் ஏதும் இல்லை. மரபுவழி அறிவும் உறுதியுடையதாகக் கொள்ள முடியாது, ஏனெனில் இதுவே பல முறை நஞ்சாகி சிக்கல் தந்துள்ளது.மரபறிவில் தரப்படும் விதிகளின் போதாமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
- "நஞ்சாகும் காளான்கள் பளிச்சென்று தெரியும் நிறத்தில் இருக்கும்".-
- "பூச்சிகளும் விலங்குகளும் நச்சுக்காளான்களை ஒதுக்கும்"–
- "நச்சுக்காளான்கள் வெள்ளியை கறுப்பாக்கும்." -
- "நச்சுத்தன்மையுடைய காளான்கள் நற்சுவையாக இருக்காது." –
- "சமைத்துவிட்டாலோ, அவித்துவிட்டாலோ, ஊறுகாய் ஆக்கிவிட்டாலோ எல்லா காளான்களும் தீங்களிக்காதவையே" –
- "நச்சுக் காளான்கள் அரிசியோடு கொதிக்க வைத்தால் அரிசியைச் சிவப்பாக்கும்"-[4]
நச்சுக்காளான்களை இனங்காணும் பொதுவான முறைகள்
சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,- வளையப்புடைப்பு, இணையம் என்பன காணப்படும்.
- கடுமையான நிறம் கொண்டதாகக் காணப்படும்.
- துர்நாற்றம் வீசும்.
- பூச்சிகளால் கவரப்படாததாகக் காணப்படும்.
- நறுக்கிய வெங்காயத்துண்டுகளுடன் பிசையும் போது ஊதா நிறம் தோன்றும்.
காளான் நஞ்சாகும் காரணங்கள்
பல ஆயிரம் காளான்கள் உலகில் இருந்தாலும், அவற்றுள் 32 மட்டுமே உயிரிழப்புக்குக் காரணமாயின; மேலும் 52 வகைகளில் குறிப்பிடத்தக்க பல்வேறு நச்சுப்பொருள்கள் இருப்பனவாகக் கருதுகின்றனர்.[7] மிகப்பெரும்பாலும், காளான் நஞ்சு, உயிரிழப்பை ஏற்படுத்துவன அல்ல,[8], ஆனால் காளான் நஞ்சால் ஏற்பட்ட பெரும்பான்மையான உயிரிழப்புகள் அமானிட்டா ஃபால்லாய்டு (Amanita phalloides) என்னும் வகையால்தான்.[9]பெருன்மையான நஞ்சாகித் துன்புற்ற நிகழ்ச்சிகள், காளான்களைத் தவறாக அடையாளம் கண்டதாலேயே நிகழ்ந்தன எனலாம். இந்த நஞ்சுத் தாக்குதலுக்கு உள்ளானவர், பெரும்பாலும் புவியின் ஓரிடத்தில் தான் பெற்ற மரபு அறிவைக் கொண்டு இன்னொரு பகுதியில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிறழ்வால் ஏற்படுகின்றது[4] அமானிட்டா ஃபால்லாய்டு பார்ப்பதற்கு ஓர் ஆசிய வகையான காளானாகிய வோல்வாரியெல்லா வோல்வோசியா (Volvariella volvacea) போல் இருப்பதால் இப்படி அடிக்கடி நேர்வதுண்டு. குறிப்பாக முதிராத நிலையில் இரண்டுமே வெளிறிய நிறத்தில் இருப்பவை, மூடுறையுடனும் (univeral veil) இருக்கும்.
அமானிட்டாக்களை மற்ற இன காளான்களோடு குழப்பிக் கொள்ள இயலும், குறிப்பாக அவை முற்றிலும் முதிராத நிலையில். ஒரு முறை[10] இவற்றை கோப்ரினசு கோமாட்டசு (Coprinus comatus) என்பதோடு தவறாக அடையாளப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment