மஞ்சட்காய்ச்சல் வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
மஞ்சட் காய்ச்சல் தீநுண்மத்தின் இலத்திரன் நுண்ணோக்கி நுண்படிமம் (234,000X உருப்பெருக்கம்). | |
ICD-10 | A95. |
ICD-9 | 060 |
DiseasesDB | 14203 |
MedlinePlus | 001365 |
eMedicine | med/2432 emerg/645 |
பாடத் தலைப்பு |
மஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும். [1] மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை. [2]
டெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர். [3]
இக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். [3]சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்நோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.
No comments:
Post a Comment