பல வகையான அவரை விதைகள்
வித்து அல்லது விதை (Seed) என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாக தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது.
விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறை மூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்கு சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
பலவகையான விதைகள் உள்ளன. சில தாவரங்கள் ஒரே ஒரு விதையை உருவாக்கும்; வேறு சில பன்மடங்கு விதைகளை உருவாக்குகின்றன; இன்னும் சில மிகக் குறைவான விதைகளை உருவாக்குகின்றன, மற்றும் சில அளவில் பெரிய விதைகளை உருவாக்குகின்றன. விதைகள் பொதுவாக கடினமான மேலுறை கொண்டும் அளவில் சிறியதாகவும் இருக்கும். ஆனால் அளவில் பெரிய தேங்காயும் ஓர் விதையே. விதைகளின் பருப்புப் பகுதியில் அவை வளர்வதற்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய விதைகள் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோருக்கு நல்ல உணவாக அமைகிறது.
பூக்கும் தாவரங்களில் விதைகள் தாவரங்களின் பழங்களின் உள்ளே இருக்கின்றன. வித்துமூடியிலித் தாவரங்களில் விதையானது பழம் போன்ற அமைப்பினுள்ளே மூடி வைக்கப்படாமல் வெறுமையாக இருக்கும். மக்கள் விவசாயம் செய்யும் நெல்,கோதுமை,கம்பு,சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகளே. விதையின் வெளிப்புறம் பாதுகாப்பிற்காக உறை ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இது வித்துறை அல்லது உமி என அழைக்கப்படுகிறது.
சில சமயங்களில் இந்த விதை என்ற பதம் வேறு சில பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக சூரியகாந்தி விதை எனப்படுவது உண்மையில் சூரியகாந்தியின் பழமேயாகும். அதேபோல் உருளைக்கிழங்கில் "விதைக் கிழங்கு" எனப்படுவது உண்மையில் உருளைக்கிழங்கில் கலவியற்ற இனப்பெருக்கத்திற்கு உதவும் தண்டுக்கிழங்காகும். இவை புதிய தாவர உருவாக்கத்திற்காக விதைக்கப்படுவதனாலேயே "விதை" என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. தென்னையிலும் புதிய தாவர உருவாக்கத்திற்கு தென்னையின் பழமான தேங்காயே பயன்படுத்தப்படுகின்றது. தேங்காயில் உள்ளாக இருக்கும் சிரட்டை/கொட்டாங்கச்சியும் அதன் உள்ளான பகுதிகளுமே வித்தாகும்.
பொருளடக்கம் |
வித்தின் அமைப்பு
இருவித்திலைத் தாவர வித்து ஒன்றின் கட்டமைப்பு: (a) வித்துறை, (b) வித்தகவிழையம், (c) வித்திலை, (d) வித்திலைக்கீழ்த்தண்டு
இருவித்திலைத் தாவரமான வெண்ணெய்ப் பழத்தின் வித்துறை, வித்தகவிழையம், முளையம் போன்றவற்றைக் காட்டும் வரிப்படம்
- முளையம் (Embryo):
- வித்தகவிழையம் (Endosperm):
- வித்துறை (Seed coat)
வித்து ஒன்றில் மேற்கூறப்பட்ட முக்கியமான மூன்று அமைப்புக்கள் தவிர்ந்த முடிகள் போன்ற வேறு வெளி வளர்ச்சிகள், சூலகச் சுவருடன் சூல்காம்பினால் இணைக்கப்பட்ட வித்துத் தழும்பு போன்றனவும் காணப்படலாம். பல இனங்களில் உலர் பழங்கள், "விதைகள்" என அழைக்கப்படுகின்றது. சூரியகாந்தி விதைகள், அவை முற்றாக பழத்தின் கடினமான சுவரால் மூடப்பட்ட நிலையிலேயே விற்பனைக்கு வரும். அதன் உண்மையான விதையைப் பெற வேண்டுமாயின், அதன் கடினமான வெளிக் கவசம் நீக்கப்பட வேண்டும். Peach போன்ற வேறு சில இனங்களில் பழத்திலுள்ள கடினப்படுத்தப்பட்ட உட்கனியம் எனப்படும் பகுதியானது விதையைச் சுற்றி அதனுடன் ஒன்றாக இணைந்து காணப்படும்.
வித்து உற்பத்தி
பூக்கும் தாவரம், மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களிலேயே வித்துக்கள் உற்பத்தியாகின்றன. பூக்கும் தாவரங்களில் வித்துக்கள் மெல்லிய அல்லது தடிப்பான, கடினமான அல்லது சதைப்பிடிப்பான பகுதியால் மூடப்பட்டு இருக்கும். சில பூக்கும் தாவரங்களின் வித்துக்கள் கடினமான, சதைப்பிடிப்பான இரண்டு வகைகளையும் கொண்ட மேலுறையைக் கொண்டிருக்கும். வித்து மூடியிலிகளில் வித்துக்களை மூடி வேறு எந்த அமைப்புக்களும் உருவாகாமையால் வித்துக்கள் திறந்த நிலையில் இருக்கும்.இயற்கையான நிலையில் தாவரங்களில் வித்து உற்பத்தியானது ஒவ்வொரு ஆண்டும் வேறுபட்டிருக்கும். காலநிலை, பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள், தாவரத்தின் உள்ளான சுழற்சி முறைகள் போன்ற காரணிகளால் வித்து உற்பத்தியானது வேறுபடுகின்றது.
பூக்கும் தாவரங்களில் சிக்கலான முறையிலான ஒரு கருக்கட்டல் நிகழ்வினால் வித்துக்கள் உற்பத்தியாகின்றன. பெண் பாலணுவான முட்டைக் கருவுடன், மகரந்தமணியில் உள்ள ஒரு ஆண் பாலணுக் கரு இணைந்து இருமடிய கருவணு உருவாகின்றது. அதேவேளை இரு பெண் முனைவுக் கருக்களுடன், இரண்டாவது ஆண் பாலணுக்கரு இணைந்து மும்மடியக் கருவொன்று உருவாகின்றது. இது இரட்டைக் கருக்கட்டல் என அழைக்கப்படும். இருமடியக் கருவணுவானது முளையமாக இருக்க, மும்மடியக் கருவானது விரைவாக கலப்பிரிவுக்கு உட்பட்டு உணவைச் சேமிக்கும் வித்தகவிழையமாக விருத்தியடையும்.
வித்துமூடியிலிகளில், இரட்டைக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. மகரந்தத்தில் இருந்து பெறப்படும் இரு ஆண் பாலணுக்களில் ஒன்று மட்டுமே பெண் பாலணுவுடன் இணையும். இரண்டாவது பயன்படுவதில்லை[2]. சிலசமயம் இரண்டு ஆண் பாலணுக்களும் இணைந்து இரு கருவணுக்கள் உருவாகினாலும், ஒன்று அழிந்துவிடும்[3].
வித்தின் தொழில்கள்
முளையத்திற்கான ஊட்டச்சத்து
முளையத்திற்கான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதன் மூலம் தாவரங்கள் அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு உதவுகின்றது.வித்துப் பரவல்
Dandelion seeds are contained within achenes, which can be carried long distances by the wind.
The seed pod of milkweed (Asclepias syriaca)
- காற்றினால் பரவல்
- நீரினால் பரவல்
- விலங்குகளினால் பரவல்
வித்தின் உறங்குநிலை
முதன்மைக் கட்டுரை: வித்து உறங்குநிலை
வித்து உறங்குநிலை
(Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத்
தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது
முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம்.
சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு
ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையில்
இருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம். முளைத்தலுக்கான
அத்தியாவசியமான தேவைகள் கிடைக்காதவிடத்தோ, மிகவும் கடுமையான குளிர் அல்லது
கடுமையான சூடு போன்ற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளிலோ வித்துக்கள்
முளைக்காமல் இருத்தல் Seed hibernation எனப்படும்.வித்து முளைத்தல்
முதன்மைக் கட்டுரை: முளைத்தல்
வித்துக்களில் உள்ள முளையமானது முளைத்தல் செயல்முறை மூலம் இளம் தாவரமான நாற்றாக
விருத்தியடையும். இதற்கு வித்தானது நிலைத்து வாழும் தகுதியுடையதான
நிலையில் இருப்பதும் (அதாவது உயிருள்ள முளையத்தைக் கொண்டிருப்பதும்),
உறங்கு நிலையில் இருந்திருப்பின் அதிலிருந்து மீண்டிருப்பதும்,
முளைத்தலுக்கான பொருத்தமான சூழல் காரணிகள் கிடைப்பதும் அவசியமாகும்.சிலசமயம் விதைகள் முளையமற்று வெறுமையாக இருப்பதுண்டு. மகரந்தச்சேர்க்கை சரியாக நிகழாமல் போனதால் முளையை உருவாகாமல் இருந்திருக்கலாம். விதைகள் பழத்தினுள் இருக்கையிலேயே அல்லது பரவலின் பின்னர் கொன்றுண்ணிகளாலோ, நோய்க்காரணிகளாலோ தாக்கப்பட்டு விதை அழிந்திருக்கலாம். பாதகமான சூழல் காரணிகளும் கூட விதையின் உயிர்ப்புத் தன்மையைத் தாக்கி அழித்திருக்கலாம். சில விதைகள் நீண்ட காலம் உயிருடன் இருக்கும் அதேவேளை, வேறு சிலவற்றில் விரைவில் உயிரணுக்கள் இறப்பதனால், விதைகள் உயிர்ப்பற்ற நிலைக்குச் செல்லலாம். இவ்வாறு உயிர்ப்பற்ற நிலையிலிருக்கும் விதைகள் மலட்டு விதைகள் (Sterile seeds) எனப்படும்.
வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்ட முடியும்[4].
வித்துக்களின் பொருளாதார முக்கியத்துவம்
உணவு
தானிய விதைகள், அவரை இன விதைகள், கொட்டை வகை விதைகள் மனிதரின் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. நாம் உணவில் பயன்படுத்தும் பல எண்ணெய்களும் விதைகளிலிருந்தே பெறப்படுகின்றன. தவிர பல பானங்கள், மசாலாப் பொருள்கள் போன்றனவும் விதைகளில் இருந்து பெறப்படும்.மனிதருக்கான உணவாக மட்டுமன்றி கால்நடைகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. சில விதைகள் பறவைகளின் உணவாகவும் இருக்கின்றது. கால்நடை வளர்ப்பு செய்பவர்கள், மற்றும் பறவைகள் வளர்ப்பவர்கள் விதைகளை வாங்கி தாம் வளர்க்கும் கால்நடைகளின் அல்லது பறவைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வர்.
விவசாயம்
தாவரங்களில் விதை மூலம் இனப்பெருக்கம் ஒரு முக்கியமான முறையாதலால், பல பயிர்கள் விதை மூலமே பயிர்ச்செய்கை யில் பயிரிடப்படுகின்றன. தானியங்கள், பல மரக்கறி வகைகள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் புல் போன்ற பல விவசாய உற்பத்திப் பொருட்களில் விதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.நச்சுப் பதார்த்தங்கள்
சில விதைகள் மனிதருக்கும், ஏனைய விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல நச்சுத்தன்மை கொண்டவையாக, அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன[5]. அழகான வண்ணங்கள் கொண்ட பூக்கள், பழங்களால் கவரப்படுவதால், பொதுவாக வளர்ந்தவர்களை விடவும் குழந்தைகளே விதை நச்சுப்பொருட்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்[6]. தாவரங்கள் தம்மை ஏனைய உயிரினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் கையாளும் பொறிமுறைகளில் ஒன்றாக விதைகளில் சில வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. அவை சில சமயம் வெறும் உருசியற்றதாகவோ, அல்லது கசப்பானதாகவோ இருக்கலாம். சில சமயம் அவை நச்சுத் தன்மை உடையதாக, அல்லது சமிபாட்டுத் தொகுதியினுள் செல்கையில் நச்சுத் தன்மையுடைய வேதிப்பொருளாக மாற்றமடைவதாக இருக்கும்.ஆமணக்கம் விதையானது ரிசின் எனப்படும் நச்சுத்தன்மை உடைய ஒரு வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றது. 2 - 8 உட்கொள்கையில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு என குறிப்புகள் இருப்பினும்[7][8], இதனால் ஏற்பட்ட விலங்கு இறப்புக்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது[9].
குண்டுமணிகள் நிவப்பு நிறத்தில் கறுப்பு புள்ளி கொண்ட அழகான விதையாக இருப்பதனால் அணிகலன்கள் செய்யவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுவதுடன், நிறையாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இவை மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும். இந்த விதைகளில் உள்ள அபிரின் எனப்படும் நச்சுப்பொருள் உள்ளது. ஒரு விதை உடைந்து நச்சுப்பொருள் கண்ணில் பட்டால், கண்ணைக் குருடாக்கக் கூடியதாகவும், உட்கொள்ளப்பட்டால் இறப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த விதைகள் மிகவும் கடினமான வித்துறையைக் கொண்டிருப்பதனால் மிக இலகுவில் உடையாதவையாக இருக்கின்றன. அதேவேளை இவை சமைக்கப்பட்டால், நச்சுத்தன்மையை இழந்துவிடுகின்றன என்றும் கூறப்படுகின்றது. [10]
சில விதையின் உள்ளீடுகள் சமிபாட்டுப் பிரச்சனைகளையும், வயிறு, குடல் தொடர்பான அசௌகரியங்களையும் தர வல்லன. சில விதைகள் சமைக்காமல் உட்கொள்ளும்போது மட்டுமே பாதிப்பைக் கொடுக்கும்.
வேறு பயன்கள்
- பஞ்சு விதையுடன் இணைந்திருக்கும் பஞ்சு நார், பஞ்சுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது[11].
- உணவுப் பயன்பாட்டுக்கல்லாமல் வேறு பயன் தரும் எண்ணெய் வகைகள். எ.கா. Linseed oil போன்ற சாயங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்[12].
- சில மருந்து வகைகள். எ.கா. ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பூஞ்சை தொற்றுக்களுக்கு எதிராக பயன்படுத்தலாம்[13][14].
- சில விதைகள் மணிகளாகக் கோர்த்தெடுக்கப்பட்டு, மாலை, கைச்சங்கிலி போன்ற அலங்கார அணிகலன்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. குண்டுமணி[15][10].
- சில விதைகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கவோ, அல்லது நேரடியாகவே விளையாட்டிலோ (புளியங்கொட்டை போன்றன) பயன்படுத்தப்படுகின்றன.
- சிலசமயம் விதைகள் பயிர்ச்செய்கையில் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றது எ.கா. பஞ்சு விதைகள்[16].
- பண்டைய காலத்தில் விதைகள் நிறையை அளவிடவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எ.கா. குண்டுமணிகள் தங்கத்தின் நிறையை அளக்கப் பயன்படுத்தப்பட்டது. 10 குண்டுமணிகள் சேர்ந்தால் 1 கிராம் அளவு வருவதாகக் கூறப்படுகின்றது. குண்டுமணிகள் மிக உலர்ந்த விதைகளாகவும், நீண்ட காலத்திற்கு நிறையில் அதிக மாற்றமின்றியும் இருக்கும் இயல்புள்ளவையாதலால் இவற்றை நிறைய அளவிடப் பொருத்தமானதாகக் கருதினர்[17][10]
படக்காட்சி
- தானிய விதைகளின் உற்பத்திப் பொருட்கள்
-
Bulgur (துருக்கி உணவு)
-
-
semolina (கோதுமை ரவை உணவு)
- பச்சையாக / அவித்து / வறுத்து உண்ணும் பருப்புகள்
- கொட்டைவகை விதைகள்
-
வாதுமை (Prunus dulcis)
-
முந்திரிக் கொட்டை (Anacardium occidentale)
-
தேங்காய் (Cocos nucifera)
- தானிய விதைகள்
-
வாற்கோதுமை விதை
-
மக்காச்சோளம் விதை
-
புல்லரிசி (Avena sativa) விதை
-
ராய் (புல்வகை) விதை
- அவரையின விதைகள்
காற்றினால் பரவும் வித்துக்கள் எவை எனக் குறிப்பிடப்படவில்லை.
ReplyDelete