பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பொருளடக்கம் |
வகைகள்
- சாதாரண பரோட்டா
- கொத்து பரோட்டா
- முட்டை பரோட்டா
- சில்லி பரோட்டா
- விருதுநகர் வீச்சு பரோட்டா
- வீச்சு
தேவையான பொருட்கள்
- மைதா மாவு (தேவையான அளவு).
- உப்பு (தேவையான அளவு)
- எண்ணெய் (தேவையான அளவு)
- தண்ணீர் (தேவையான அளவு)
செயல்முறை
- மைதா மாவை பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணிர் விட்டும் பின் எண்ணெய் விட்டும் பிசைந்து, மிருதுவான பின்னர் சிறு உருண்டைகளாக பிசைந்த மாவை உருட்ட வேண்டும். உருண்டையை உருட்டும் கட்டையின் உதவியோடு, பெரிய வட்டமாக உருட்டி, அதனை மடிக்து, அதனை அழுத்தி சிறிது வட்டமாக மாற்றவும். பின்னர் தோசைக்கல்லில் இட்டு சந்தன நிறத்தில் மாறியவுடன் எடுத்தால் பரோட்டா தயாராகி விடும்.
No comments:
Post a Comment