சட்னி | |
---|---|
தென்னிந்தியாவில் பரிமாரப்படும் ஒரு வகைச் சட்னி |
|
தொடங்கிய இடம் | |
வேறு பெயர்(கள்) | சட்னி |
தொடங்கிய இடம் | இந்தியா, பாகிஸ்தான் |
பகுதி | தெற்காசியா |
விவரம் | |
முக்கிய மூலப்பொருட்(கள்) | உப்பு, மிளகாய், புளி, கொத்தமல்லி இலை, தக்காளி |
சட்னி என்பது மற்றப் உணவுகளுடன் தொட்டு சாப்பிடும் ஒருவிதமான உணவு பதார்த்தம். இதனை தோசை, இட்டலி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள்.
வகைகள்
பலவிதமான் சட்னிகள் உண்டு. அவற்றில் சில:- தேங்காய் சட்னி
- புதினா சட்னி
- தக்காளிச் சட்னி
- உடைத்த (பொட்டுக்) கடலை சட்னி
- வெங்காய சட்னி
- மல்லாட்டை(வேர்க்கடலை) சட்னி
- பூண்டு சட்னி
- கொத்தமல்லி சட்னி
- வாழைப்பூச் சட்னி
- மாங்காய் சட்னி
- வாழைத்தண்டுச் சட்னி
- பூசனிக்காய் சட்னி
- வெள்ளரிக்காய் சட்னி
செயல்முறை
ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும்.தேவையான பொருட்கள்:
தேங்காய், தண்ணீர், தேவையான அளவுக்கு உப்பு, கடுகு, கறிவேப்பிலை.
தேங்காயை உடைத்து, அம்மியில் உடைத்து, பின்பு ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அறைக்க வேண்டும். தேவையான் தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அறைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
No comments:
Post a Comment