பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.
நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 °C (101 - 102.2 °F) வரை காணப்படும்.
பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.
இயல்பு
நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது.நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 °C (101 - 102.2 °F) வரை காணப்படும்.
பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை.
No comments:
Post a Comment