ஒட்டகம் என்பது பொதுவாக
பாலைவனங்களில் வாழும்
தாவர உண்ணி வகையைச் சேர்ந்த
பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை
ஆசியா,
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின்
பால்,
இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள்
நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப்
புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது
[1]. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100
இலிட்டர்
நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில்
நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து
இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர்
என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால்
சிவப்புக் குருதியணுக்கள், ஆசுமாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின்
சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை)
[2]
ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34°
செல்சியசு முதல் 41°
செ
(106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல்
வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர,
ஒட்டகங்களின் உடல் பொதுவாக
வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய
சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.
தனித்தன்மை
ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன்
சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின்
வெப்பநிலையை 34 °
செல்சியசிலிருந்து 41.7 °
செ
வரை (93°F-107°F.) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல்
வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால்,
வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும்
தாக்குப்பிடிக்கமுடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55°
செல்சியசு என்று வெப்பநிலை உள்ள போது, வெப்பம் கடத்தாத தன் தடிமனான
தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும், தன்
உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும்
தன்மை கொண்டது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும்
தடுக்கப்படுகின்றது. ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச்
சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது.
சிறுதொலைவு ஓட்டம் ஒன்றை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி முடிக்கக்
கூடியது. ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ
எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம்
இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65
கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து
ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும்
விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப்
பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றன.குடிக்கும் நீரில்
குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு
அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை
விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் மற்ற
பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக
இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில்
இருக்கும்.ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும்
இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.பாலைவனத்தின் சூட்டில் கண்கள்
காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல்
வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த
தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர்
நிலையை அடைந்து கொள்ளுதல் சிறப்பம்சமாகும்.
ஓட்டகத் திமில்
ஒட்டகங்கள் பாலைவனத்திலேயே அதிகம் வாழ்வதால் எப்பொழுது உணவு கிடைக்கும்
என்று கூறமுடியாது.உணவு கிடைக்கும் வரை உயிர்வாழ்வதற்கான தனித்துவமான
தன்மைதான் இந்தத் திமில்.திமிலானது முழுவதும் கொழுப்பால் ஆனது.இது ஒரு
சேமிப்பகம் போன்றது.உணவு அதிக காலம் ஒட்டகத்திற்கு கிடைக்கவில்லையெனில்
இந்தத் திமிலிலிருந்து ஒட்டகத்திற்கு உணவு கிடைக்கும்.சக்த்தியைச் செலவு
செய்யச் செய்ய இந்தத் திமிலின் அளவு குறைந்துகொண்டே போகும்.மீண்டும்
ஒட்டகம் சாப்பிட்டால் திமிலின் அளவு பெரிதாகும்.
ஒட்டகப் பால்
உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிகசத்து நிறைந்துக் காணப்படுவது
ஒட்டகப் பால் ஆகும். விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகத்தின்
பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது.
[சான்று தேவை] இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும்பால்
ஒவ்வாமை
உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம். ஒட்டகப்பாலில் உள்ள
புரதங்கள் மாறுபட்டவை. மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள்
(Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. பசும் பாலில்
இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை
அறிவித்துள்ளது. இதனது பால் புற்றுநோய், எயிட்ஸ் போன்ற நோய்களை எதிர்க்கும்
சக்தியையும் கொண்டிருக்கின்றது.
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஒட்டகங்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே படிக்கலாம்.
https://ealuvi.blogspot.com/2024/05/camel.html
Delete